மாதாந்த அறிவு முகாமைத்துவ பரீட்சை Online முறை மூலம் நாளை இடம்பெறும்.
மாதாந்த அறிவு முகாமைத்துவ பரீட்சை Online முறை மூலம் நாளை(02) இடம்பெறும்.
மாவட்ட செயலக உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரிவினரால் நடாத்தப்படும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த அறிவு முகாமைத்துவ பரீட்சையானது நாளை(02) புதன்கிழமை பிற்பகல் 03.00மணி தொடக்கம் 04.00மணி வரையிலான ஒரு மணித்தியாலய காலப்பகுதியில் ஒன்லைன் (Online) முறை மூலமாக இடம்பெறவுள்ளதாக உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரிவின் பிரதம இணைப்பாளர் அறிவித்துள்ளார்.
அறிவு முகாமைத்துவ பரீட்சை வினாத்தாளின் Link உற்பத்தித்திறன் Viber Group ஊடாக குறித்த காலப்பகுதியில் வெளியிட்டுவைக்கப்படும். அதற்கூடாக பிரவேசித்து பரீட்சைக்கு தோற்றமுடியும்.
மேலும் இவ் வசதியினை பெறமுடியாதவர்கள் உற்பத்தித்திறன் மேம்பாட்டுப்பிரிவில் தங்கள் விபரங்களை இன்று(01) பி.ப 04.00மணிக்கு முன் பதிவு செய்துகொள்வதன் மூலம் வழமையான பரீட்சை போன்று வினாத்தாள் மூலமாக பரீட்சைக்கு தோற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் முகமாக வழமையான பரீட்சை நடைமுறையானது ஒன்லைன் (Online) மயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.