கிளிநொச்சி பாரதிபுத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் 3.5 கிலோ மழைக் காளான்.
கிளிநொச்சியில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான்
கிளிநொச்சி பாரதிபுத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான் முளைத்துள்ளது.
குறித்த காளானை விவசாயி நேற்று அறுவடை செய்துள்ளார். பாரதிபுரம்பகுதியில் உள்ள மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின் வீட்டிலேயே குறித்த மழைக்காளான் முளைத்துள்ளது.
நேற்றைய தினம் அதனை பிடுங்கும்போது 3.5 கிலோ எடையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதில் ஓர்வகை பூச்சி தாக்கம் உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தாது பார்வைக்காக கடையில் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.