பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு.

பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடு முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்க 16 நாள் விழிப்புணர்வு செயற்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலகலாவிய ரீதியில் நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கெதிரான வன்முறை தினமாகவும், டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இரு தினங்களுக்கும் இடைப்பட்ட 16 தினங்களும் பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்ட நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு குறித்த நிறுவனத்தால் விழிப்புணர்வு செயற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் வட்டுவாகல் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் நேற்றும்(01) பிரதேச செயலகங்களில் நேற்று முன்தினமும்(30) குறித்த விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர்கள் வெளியிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்றிட்டம் இம்முறை “COVID 19 இடர் சூழ்நிலையிலும் வன்முறைகளை எதிர் கொள்ளும் பெண்களை வலுப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

யாழ் சமூக செயற்பாட்டு மையம்(JSAC) கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடுகளை பல்வேறு வடிவங்களில் பரவலாக முன்னெடுத்து வருகின்ற நிலையில், இம் முறை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் முகமாக விழிப்புணர்வு செயற்பாடுகள் ஒன்லைன்(Online) மற்றும் ஊடகங்கள், பிரசுரங்கள், ஸ்டிக்கர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.