குறிகாட்டுவான் பயணிகள் போக்குவரத்து படகு சேவை இடைநிறுத்தம்.

நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்து படகு சேவை வங்கக் கடலில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று (02.12.2020) முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று மதியத்திற்கு முன்பாக புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து பரவலாக மழை தொடங்கி நண்பகலுக்குப் பின்னர் கன மழை பொழியத் தொடங்கும். காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும். எனவே மிகவும் அவதானமாக இருத்தல் அவசியம்.