வடக்கு கிழக்கு மாகாண மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ, திறந்த வெளிகளில் ஒன்றுகூடவோ வேண்டாம்.
புரவி புயல் இலங்கையை நெருங்கி வருவதால் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ, திறந்த வெளிகளில் ஒன்றுகூடவோ வேண்டாம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அறிவித்துள்ளார்.
மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
“வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புயல் தாக்கும்போது திறந்த வெளியில் செல்வது அல்லது தங்குவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.