பொன்னாலை கடற்பரப்பில் மீனவரைக் காணவில்லை!

பொன்னாலை கடற்பரப்பில்
மீனவரைக் காணவில்லை!
யாழ்ப்பாணம், பொன்னாலைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளார்.
சுழிபுரம், பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது 37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல்போயுள்ளார்.
பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரைத் தேடும் பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர், பொன்னாலை வட்டார உறுப்பினர் மற்றும் பொன்னலை கிராம சேவையாளர் ஆகியோரும் இன்று காலை சென்றிருந்தனர்.