சிறைக்கும் கைதிகளுக்கும் புதிய இராஜாங்க அமைச்சர்.
சிறைக்கும் கைதிகளுக்கும்
புதிய இராஜாங்க அமைச்சர்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று முற்பகல் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
குறித்த பதவியில் இருந்த சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொரோனாத் தடுப்பு இராஜாங்க அமைச்சராக நேற்றுமுன்தினம் மாற்றப்பட்டிருந்தார்.
இதேவேளை, இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்தே உள்ளமை குறிப்பிடத்தக்கது.