கணவரை பிரிந்த துக்கத்தில் இருப்பார் என அனைவரும் நினைத்த வனிதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீபகாலமாக வனிதா சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி நெட்டிசன்களுக்கு கண்டன்டுகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இரண்டு முறை காதலில் விழுந்த நடிகை வனிதா, 3-வது முறையாக பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் திருமணம் செய்து கொண்ட வேகத்திலேயே அவரைப் பிரியவும் செய்தார் வனிதா. இதனால் சில காலங்களாக வனிதாவின் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாக்களில் களை கட்டியது.
மேலும் மூன்றாவது கணவரை பிரிந்த துக்கத்தில் இருப்பார் என்று அனைவரும் வனிதாவிற்கு மாறி மாறி ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் வனிதா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பலரை வியக்க வைத்துள்ளது.
அதாவது, வனிதா சோகத்தில் மூழ்கி இருப்பார் என்று நினைத்த பலருக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில், தனது தலை முடியை கலர் கலராக ஹேர் கலரிங் செய்து, விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ள வனிதா, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறாராம்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ‘ஒரே மாசத்துல இப்படி ஒரு சேஞ்சா’ போன்ற கமெண்ட் களையும் பெற்று வருகிறது.