இலங்கையில் ஒரே நாளில் 878 பேருக்குக் கொரோனா : 25 ஆயிரத்தைத் தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 878 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் மொத்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் மினுவாங்கொடை, பேலியகொட கொரோனாக் கொத்தணிகளின் ஊடாகத் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய மேலும் 487 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.
6 ஆயிரத்து 982 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.