புரெவி புயல் : சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை!
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை அடுத்து புரெவி புயல் நேற்று இரவு இலங்கையில் கரை கடந்தது என்பதும் அதன் பின்னர் இன்று அல்லது நாளை பாம்பன் பகுதியில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் ,
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 21 செ.மீ.க்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழையை கொட்டித் தீர்த்தது என்பதும், புரேவி புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் பலத்த மழை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகவும் குறிப்பாக திருத்துறைபூண்டியில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது