மன்னார் மற்றும் பூநகரி இடையே கடற்கரைக்கு அருகில் புரெவி.
புரவி சூறாவளி நாட்டைவிட்டு வெளியேறியதாகவும்
மன்னார் மற்றும் பூநகரி இடையே கடற்கரைக்கு அருகில் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
புரவி சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் இலங்கையில் புரவி சூறாவளியின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வாளர் பிருத்திகா ஜெயகோடி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் 4 ஆயிரத்து 7 பேர் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.