நயன்தாராவுடன் நடிக்க முடியாது : வேறு ஆளை பாரு : விலகிய நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. வயது ஏறிக்கொண்டே இருந்தாலும் படத்துக்குப்படம் சம்பளத்தையும் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்.
நயன்தாரா எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருக்கின்றனர். அதற்கு காரணம் நயன்தாராவின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருப்பது தான்.
அந்த வகையில் நயன்தாரா அடுத்து நடிக்க இருக்கும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் இரண்டாவது முறையாக தன் புதிய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருப்பது தான்.
விக்னேஷ் சிவன் தன் வாழ்நாளில் இயக்கிய 3 படங்களில் ஹிட் கொடுத்த ஒரே ஒரு படம் என்றால் அது நானும் ரவுடி தான். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ஜோடி பெரிதும் பேசப்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படம் வசூலிலும் சக்கை போடு போட்டது.
அதன் விளைவு தற்போது மீண்டும் பல வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, விஜய்சேதுபதி கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் பிரபல முன்னணி நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமந்தாவை டம்மி செய்ததால் இந்த படத்திலிருந்து விலகி விட்டாராம் சமந்தா.
காதலர் விக்னேஷ் சிவன் செய்த விளையாட்டில் செம கடுப்பாகி உங்க சங்காத்தமே வேண்டாம் என ஓட்டம் பிடித்து விட்டாராம் சமந்தா. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக வேறு பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.