பரந்தன் கிளைமோர் குண்டு தொடர்பாக கைதானவர்கள் விபரம்

கிளிநொச்சியில் உள்ள பரந்தன் பகுதியில் வைத்து நேற்று (02) இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். புலிகள் அமைப்பின் மறுசீரமைப்புத் தலைவரான கோபிநாதன் அல்லது கோபியின் தாயார் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுக்கு வழங்குவதற்காக ஒரு கிளைமோர் குண்டு ஒன்றை எடுத்துச் சென்றபோது, அவர்கள் கைதானதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இயக்கச்சி பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அவற்றை கொண்டு சென்றதாக பெற்ற தகவல் அடிப்படையில், கோபியின் தாயார் வாழும் வீட்டின் கொல்லைப்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்களை பாதுகாப்புப் படையிர் தேடி எடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக செல்வநாயகம் ராசமலன், 67, குலசிங்கம் குகனேஸ்வரி, 62, தயானிஜன் அம்பிகா, 35, மற்றும் சிங்ராஜா தயானுஜன் (29) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களை கிளிநொச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.