ஐ.நா : கஞ்சாவுக்கு பச்சை விளக்கு : இனி கஞ்சா போதைப் பொருள் இல்லை
அதிக ஆபத்துள்ள போதை பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சாவை அகற்ற ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கஞ்சா சார்ந்த தயாரிப்புகள் குறித்து சுகாதார அமைப்புகள் வழங்கிய தொடர் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் 53 உறுப்பு நாடுகளில் 27 நாடுகள் கஞ்சாவை போதை பொருள் பட்டியலில் இருந்து அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிக ஆபத்து உள்ள பட்டியலில் இருந்து கஞ்சாவை அகற்றும் திட்டத்திற்கு எதிராக 25 நாடுகள் மட்டுமே வாக்களித்தன.
அதன்படி, ஹெராயின் உள்ளிட்ட கொடிய போதை பழக்கமுள்ள போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா அகற்றப்படும். கஞ்சா இனி ஆபத்தானதாக கருதப்படாது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது மற்றும் பொருளாதார பயிராக வளர்ப்பது குறித்து சர்வதேச அளவில் நிறைய பேச்சுக்கள் வந்துள்ளன. இதற்கு நேர்மாறாக, இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் குறித்து நிறைய பேச்சுக்கள் வந்துள்ளன.
சுவிற்சர்லாந்தில் கஞ்சா பெட்டிக் கடைகளில் கூட பொதுவாக விற்பனையாகின்றன.