“பி.சி.ஆர். செய்ய எம்மிடம் பணம் இல்லை” விமான நிலையத்தில் பயணிகள் எதிர்ப்பு.

“பி.சி.ஆர். செய்ய எம்மிடம் பணம் இல்லை” விமான நிலையத்தில் பயணிகள் எதிர்ப்பு.
ஓமானிலிருந்து இலங்கைக்கு இன்று அழைத்து வரப்பட்டிருந்த 20 பேர் பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்குத் தம்மிடம் பணம் இல்லை எனத் தெரிவித்து எதிர்ப்பு வெளியிட்டனர்.
இன்று காலை 7.40 மணியளவில் ஓமானில் இருந்து 54 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது அவர்களில் 20 பேர் பி.சி.ஆர். பரிசோதனையைச் செய்வதற்கு தம்மிடம் பணம் இல்லை என்று தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் பயணிகளின் கோரிக்கையை ஆராய்ந்த அதிகாரிகள், விமான நிலையத்தில் அமைந்துள்ள இரசாயன பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி அவர்களுக்கான அந்தப் பரிசோதனையை முன்னெடுத்தார்கள்.