பாதுகாப்பு அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
பாதுகாப்பு அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட புரேவி சூறாவளியின் தாக்கத்தின் முன்னெச்சரிக்கையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் குடியிருந்தவர்களின் பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை(01) தொடக்கம் நான்கு பாதுகாப்பு அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
கருணாற்றுக்கேணி அரசினர் தழிழ் கலவன் பாடசாலை, கொக்குளாய் மேற்கு அரசினர் தழிழ் கலவன் பாடசாலை, கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம், கொக்குத்தொடுவாய் மத்தி ஆரம்பப்பாடசாலை ஆகிய 4 பாதுகாப்பு அமைவிடங்களில் 130குடும்பங்களை சேர்ந்த 447 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் நேற்று(03) மாலையில் பாதுகாப்பு அமைவிடங்களில் இருந்து மக்கள் அவர்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தமது குடியிருப்புக்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந் நிலையில் இன்று(04) காலை உணவின் பிற்பாடு 9.30மணிக்கு மிகுதி இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் 92 குடும்பங்களை சேர்ந்த 282பேர் தங்க வைக்கப்பட்டுருந்தனர். அவர்கள் தமது வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு பாதுகாப்பு அமைவிடத்தில் தனிமைப்படுத்தலுக்குட்பட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு அங்கத்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுக்கு ஒரு வாரத்திற்கான உலருணவு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.