கொவிட் தடுப்பூசி பிரிட்டனை சென்றடைந்துள்ளது.

கொவிட் தடுப்பூசி பிரிட்டனை சென்றடைந்துள்ளது.

பிரிட்டனில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 60,000 ஐத் தாண்டியுள்ள நிலையில், ஃபைசர் (Pfizer) கொவிட் தடுப்பூசி பெல்ஜியம், புர்ஸில் (Puurs) தயாரிப்பு பகுதியில் இருந்து பிரிட்டனை நேற்று சென்றடைந்துள்ளது.

800,000 டோஸ் தடுப்பூசி யூரோ சுரங்க பகுதியூடாக மூலம் லொறிகளில் கொண்டு வரப்பட்டது.

இந்த Pfizer/BioNTech தடுப்பூசி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு 70 சென்டி கிரேட் வெப்பநிலையில் உறைவிப்பான் ஒன்றில் சேமிக்கப்பட வேண்டும். தடுப்பூசியை விநியோகிக்கவும் சேமிக்கவும் “மிகவும் சவாலான உள்கட்டமைப்பு” தேவை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள தரவுகளின்படி, ஒரு ஃபைசர் தடுப்பூசிக்கு 15 பிரித்தானிய பவுண் செலவாகும், ஒக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு 3 டொலர் மட்டுமே செலவாகும். மேலும், ஒக்ஸ்போர்டு தடுப்பூசி மட்டுமே அறை வெப்பநிலையில் வைக்கக்கூடிய தடுப்பூசியாகும்

பாதிக்கப்பட்டவர்களை அந்த ஆபத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்க ஃபைசர் பயோ அன்டெக் தடுப்பூசியை மட்டும் நம்பக்கூடாது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.