குளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.
யாழ் வடமராட்சியில் நேற்று மாலை சமூக சேவையில் ஈடுபட்ட போது நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழப்பு
நெஞ்சம் கனக்கிறது. நல்ல பணிக்கு முன் வந்து குளத்தின் அருகில் கழிவகற்றிய ஒர் இளம் சமூக ஆர்வலனை குளத்து சகதி பலி கொண்டது.
குளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.
நெல்லியடி மத்தியகல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோது சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கடுக்காய், கட்டைவேலி கரவெட்டி, என்ற முகவரியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தாய் தந்தையர் இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்துவரும் மாணவனும் அவருடைய நண்பர்களும் நுணாவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்தார் என்றும், அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கைகைகளை விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்து வருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.