மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சாவை ஐ.நா நீக்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சாவை ஐ.நா நீக்கியுள்ளது.
இதற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. ஐ.நா.,வின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. கஞ்சாவை வேறு பட்டியலுக்கு மாற்றுவதற்கு உலக சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளையும் போதை மருந்துகளுக்கான ஆணையம் பரிசீலித்துள்ளது.
கஞ்சாவை பட்டியல் மாற்றம் செய்வது குறித்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
எனினும், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஆதரவாக 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன.
ஏற்கனவே பெரும்பான்மையை எட்டிவிட்ட நிலையில், ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஞ்சாவுக்கு ஆதரவாக இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. உக்ரைன் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.