யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயப் பின் பக்க வீதியும் பாதிப்பு.

யாழ். மாவட்டத்தில் நேற்றிரவு தொடக்கம் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நல்லூர் ஆலயத்தை சுற்றியும் நல்லை ஆதீனத்தைச் சூழவும் வெள்ளம் தேங்கிக் கிடக்கின்றதால் ஆலயத்துக்குச் செல்பவர்களும், குறித்த வீதியால் பயணம் செய்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ். நகரம் உட்பட தாழ்நிலப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வீதிகளில் பயணம் செய்பவர்களும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
