யாழில் வெள்ளத்தால் அவதியுற்ற மக்கள்!
யாழில் வெள்ளத்தால் அவதியுற்ற மக்கள்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த அடைமழையால் குடாநாடு முழுவதும் இன்று அதிகாலை முதல் 5 மணிநேரம் சேவைகள் முடங்கும் நிலைமை காணப்பட்டது. யாழ். நகரின் மத்தியில் இருந்து கிராமங்கள் வரையில் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்த அடைமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளம் தேங்கியதோடு நீண்டமாலமாக நீர் தேங்காத பகுதிகளிலும் அதிக நீர் புகுந்துகொண்டது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் அதிகாலை 3 மணியில் இருந்தே நித்திரை இன்றி நீரில் கால்கடுக்கக் காத்திருந்தனர்
இதனால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் குடும்பங்களுக்கும் காலையில் பலரும் பாண் கொடுத்து உதவினர்.
பிரதேச செயலகங்கள் ஊடாகவும், அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மணிவண்ணன் தரப்பினர் ஆகியோர் ஊடாகவும் இந்த உதவிகள் வழங்கினர்.
இவ்வாறு ஏற்பட்ட அதிக மழை காரணமாக மாவட்டம் முழுமையாக ஈரத்தன்மை காணப்படுகின்றது. வீட்டு வளவுகளில் அதிக நீர் தேங்கி நிற்பதாலும் குளிரின் காரணமாக காய்ச்சல், தடிமல், இருமல் போன்ற நோய்த் தொற்றும் அபாயமும் நுளம்பு பெருகும் சூழலும் காணப்படுகின்றது.