வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராறு பகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கி வைப்பு!

புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பேராறு பகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கி வைப்பு!
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக உருவாகிய புரவி புயல் காரணமாக வடக்கு காற்றுடன் கூடிய கன மழையினால் பல குடும்பங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பேராறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு நிவாரணம் நேற்று(04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் ஊடாக நிவாரணப் பொதிகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.