புலோலியில் உயிரிழந்தவருக்கு கொரோனாத் தொற்று இல்லை.
புலோலியில் உயிரிழந்தவருக்கு
கொரோனாத் தொற்று இல்லை
திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்த பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் தந்தை மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரியை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததான.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவபீட மாணவியான அவரது மகள் கொழும்பில் இருந்து திரும்பிய காரணத்தால் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குக் கொரோனாத் தொற்று எற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரியைப் பி.சி.ஆர். பரிசோதானைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் அது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தரப்பினர் உள்ளிட்ட தொடர்புடைய மருத்துவத்துறை சார்நதவர்களிடம் வினவியபோது குறித்த தகவலை உறுதியாக மறுத்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகளை விரைந்து முடிக்க வேண்டிய காரணத்தால் பெறப்பட்ட மாதிரியை முன்னுரிமை அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதற்கமைய குறித்த நபருக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்ப்ட்டதை அடுத்து பிரதே பரிசோனை அறிக்கையிலும் அவரது உயிரிழப்புக்குக் கொரோனாத் தொற்று காரணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.