இணையதள பத்திரிகையாளர் கைதின் பின் தடுப்புக் காவலில்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த வலை பத்திரிகையாளர் முருகுப்பிள்ளை கோகிலதாசன் (Muruguppillai Gokilathasan) மேலதிக விசாரணைகளுக்காக 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
அவர் கடந்த நவம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டார்.
இவர் 37 வயதான மட்டக்களப்பு, வாழைச்சேனையில் (கின்னாயடி, வலிச்சேனை, மட்டக்களப்பு)(Kinnayady , Valaichenai, Batticaloa) மாவீரர் தினத்தன்று தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கருணா அம்மான் மற்றும் பிள்ளயனின் ஆதரவாளராகவும் சில காலம் இவர் அரசியலில் ஈடுபட்டிருந்துள்ளார்.