மங்குஸ்தான் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.
மங்குஸ்தான் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?
உலகெங்கிலும் ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப செடிகள், மரங்கள் வளர்கின்றன. அப்படிப்பட்ட மரங்கள் மனிதர்கள் உண்பதற்கு சுவையான பழங்களை தருகின்றன. மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
?வைட்டமின் சி:
மங்குஸ்தான் பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
?மூலம்:
மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் மங்குஸ்தான் பழங்கள் மற்றும் மங்குஸ்தான் பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.
?இதய நோய்கள்:
உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.
?கொலஸ்ட்ரால்:
.இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.
?கல்லீரல்:
மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்கவும், அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் தினமும் சில மங்குஸ்தான் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.
?கண்பார்வை:
நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் மங்குஸ்தான்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே மங்குஸ்தான் பழங்களை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.
?சரும நலம்:
வயதாவதாலும், ஊட்ட சத்தில்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் சிலருக்கு தோல் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருக்கங்களும், வயதான தோற்றமும் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும்.
?வயிறு நலம், செரிமான சக்தி:
மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் மங்குஸ்தான் பழம் பேருதவி புரிகிறது.