6 சிறைகளிலிருந்து 181 கைதிகள் அழைத்துவரப்பட்டது இயக்கச்சிக்கே

ஆறு சிறைச்சாலைகளில் இருந்து 181 கைதிகள் கிளிநொச்சி – இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று சிறைச்சாலைகளில் சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் இன்று அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கம்பஹா மஹர சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மகசின் சிறைச்சாலை, நீர்கொழும்பு சிறைச்சாலை, கேகாலை சிறைச்சாலை, அநுராதபுரம் சிறைச்சாலை ஆகிய சிறைச்சாலைகளில் இருந்தே அவர்கள் அழைத்துவரப்பட்டடுள்ளனர்.
அவர்கள் இயக்கச்சி இராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் கண்டி போகம்பறை சிறையில் இருந்து வந்த கைதிகள் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் அங்கு தற்போது ஓமானில் இருந்து கடந்த வாரம் வந்திருந்தவர்களே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்த பஸ்களில் ஒரு பஸ் விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.