தனது முதல் சர்வதேச விமானங்களை ஐந்து மாதங்களின் பின் தரையிறக்கியது.
அவுஸ்ரேலியா மெல்பேர்ன் விமான நிலையம் தனது முதல் சர்வதேச விமானங்களை ஐந்து மாதங்களின் பின் வரவேற்றது.
முதலாவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் tullamarine விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து
பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு.எல் 604 பயணிகள் விமானம் காலை 7.43 மணியளவில் மெல்பேர்ன் tullamarine விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இன்று மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள எட்டு பயணிகள் சர்வதேச விமானங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதல் விமானமாகும். கடைசி விமானம் இரவு 11.30 மணியளவில் தரையிறங்கவுள்ளது.
253 பயணிகள் இன்று வருவார்கள் என பொலிஸ் அமைச்சர் லிசா நெவிலி கூறுகிறார்
விக்டோரியாவின் ஹொட்டல் தனிமைப்படுத்தல் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, விக்டோரியா ஒரு புதிய COVID-19 தொன்று இல்லை. ஜூலை 10 க்குப் பிறகு முதன்முறையாக சர்வதேச வருகையை அரசு வரவேற்கிறது. விக்டோரியா 38 வது நாளாக புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இனங்காணப்படவில்லை.
விக்டோரியாவின் 14 நாட்கள் ஹொட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தில் கட்டணம்-
வயது வந்தோருக்கு $3,000, ஒரு அறையில் ஒவ்வொரு கூடுதல் வயது வந்தவருக்கு $1,000, மூன்று முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு $500 என நிர்ணயிக்கப்படும்.
இந்த செலவுகள் நியூசவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்ரேலியா கட்டணத்தை போன்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.