14 சடலங்களை ஏற்க உறவினர்கள் மறுப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 14 பேரின் சடலங்களைப் பொறுப்பேற்க அவர்களது உறவினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுகாதாரப் பிரிவினர் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் என அறியமுடிகின்றது.
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இந்தச் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக இந்தச் சடலங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன என்று கொழும்பு சட்;ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சடலங்கள் உருகுலைந்து போகும் பட்சத்தில், சுகாதாரப் பிரிவினர் மேலும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் பொறுப்பேற்க கடந்த நாட்களாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல் இன்று வெளியாகியுள்ளது.