ஆயுர்வேத மருந்தைப் பெறுவதற்காக சமூக இடைவெளியை மறந்த மக்கள்! திரண்டதால் பதற்றம்; பொலிஸார் குவிப்பு.
ஆயுர்வேத மருந்தைப் பெறுவதற்காக
சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
பெருமளவானவர்கள் திரண்டதால் பதற்றம்; பொலிஸார் குவிப்பு.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் மருத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானவர்கள் திரண்டதால் கேகாலைப் பகுதியில் பெரும் நெருக்கடி நிலைமை இன்று உருவானது.
சமூக இடைவெளியை பின்பற்றாது, ஆயுர்வேத மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் திரண்டதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மருந்து தொடர்பான மூன்றாம் கட்ட ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
கேகாலைப் பகுதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டாரவே இந்த மருந்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இன்று மருந்து இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையிலேயே பெருமளவானவர்கள் சென்றிருந்தனர். பாதுகாப்புப் படையினர், பிக்குகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானவர்கள் அங்கு திரண்டிருந்தனர்.