மஹர சிறை கலவரம் தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிப்பு.
மஹர சிறை கலவரம் தொடர்பான
இடைக்கால அறிக்கை கையளிப்பு.
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழு, நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இடைக்கால விசாரணை அறிக்கையைக் கையளித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதலால் 11 கைதிகள் உயிரிழந்தனர். சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட 117 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நீதி அமைச்சரால் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.
ஒரு மாதத்துக்குள் முழுமையானதொரு அறிக்கையையும், ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையொன்றையும் முன்வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே நேற்று அறிக்கை கையளிக்கப்பட்டது.
அதேவேளை, மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.