கொரோனா : தீவிர சிகிச்சை பிரிவில் சரத்குமார்

வயது 60 ஐ தாண்டினாலும் சரத்குமார் இன்னும் இளமையாகத் தான் இருக்கிறார். இப்பவும் ஹீரோவாக நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
சமீபகாலமாக ஹீரோவாக சரத்குமார் நடித்த படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதால் அதனைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார்.
தமிழை விட தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சரத்குமார், மகேஷ்பாபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு தந்தையாகவும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ஒரு வெப் சீரிஸில் நடிப்பதற்காக ஹைதராபாத்தில் தங்கி இருந்தாராம்.
இந்நிலையில் சரத்குமாருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சரத்குமார் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு உடலை செக்கப் செய்துள்ளார்.
சரத்குமாருக்கு கொரானா தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிறந்த மருத்துவக்குழுவின் ஆலோசனையின்படி சரத்குமார் மிக ஆரோக்கியமாக உள்ளதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்பாவைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தானே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.