இரவு நேர பந்தயத்திற்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளுடன் 40 பேர் கைது.

இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு தயாராக 24 மோட்டார் சைக்கிளுடன் 40 பேர் கைது.
இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் 24 மோட்டார் சைக்கிள்களை மிரிஹான பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிம்புலாவல புதிய வைத்தியசாலை வீதியில் வைத்து இந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட தயாராகியிருந்த நிலையிலேயே, பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
மொறட்டுவை பகுதியில் இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு, இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் காயமடைந்திருந்தார்.
காயமடைந்த பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே, இரவு நேர பந்தயத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் ஒட்டுநர்களை கைது செய்ய பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிவலு இயந்திரங்களை கொண்ட மோட்டார் சைக்கிள்களையே பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.