தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் எம்.பிக்கள் பிரதமரிடம் கடிதம் கையளிப்பு.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சிறையில் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோ கணேசன், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், வே.இராதாகிருஷ்ணன், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தவராசா கலையரசன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.