சிவனொளி பாதமலை யாத்திரையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை.
சிவனொளிபாதமலை யாத்திரையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக சுகாதார வழிமுறைகளுக்கமைய இந்த ஆண்டுக்கான சிவனொளி பாதமலை யாத்திரையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிவனொளிபாதமலை விஹாரையில் வைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இம்முறை குறைந்தளவிலான யாத்திரீகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஒரே தடவையில் 50 முதல் 200 பேர் மாத்திரமே யாத்திரையில் பயணிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சிவனொளிபாதமலை யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் பிரதேச செயலகங்களில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.