‘கொரோனா’ சட்டத்தை மீறி சபாநாயகர் இல்லத்தில் இன்று ‘பட்ஜட் விருந்து.
‘கொரோனா’ சட்டத்தை மீறி சபாநாயகர் இல்லத்தில்
இன்று ‘பட்ஜட் விருந்து’
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்ட பின்னர், சம்பிரதாய ‘பட்ஜட் தேனீர் விருந்து’ சபாநாயகர் இல்லத்தில் மாலை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வரவு – செலவுத் திட்டமும் நிறைவேற்றப்பட்டதும் இந்தத் விருந்து நடைபெறுவது வழக்கம்.
இம்முறை கொரோனாப் பெருந்தொற்று அபாயத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் மத நம்பிக்கையுடன் தொடர்புடைய கார்த்திகை விளக்கீடும் அரச படைகளினால் குழப்பப்பட்டது. மரண, திருமண நிகழ்வுகளுக்கும் வரையறுக்கப்பட்டவர்களே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்றைய பட்ஜட் விருந்துக்கு 500 பேர் வரையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த விருந்து நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற ஊழியர்கள் சபாநாயகரின் இல்லத்தை பட்ஜட் விருந்துக்காக நேற்றுமுன்தினம் தொடக்கம் அலங்கரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.