வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைக்கான விதைப்பைகள் வழங்கி வைப்பு.
வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைக்கான விதைப்பைகள் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத்திட்டத்தின் ஆர்.5.என் (R.5N) செயற்றிட்டம் மக்களின் போசனை மட்டத்தினை உயர்த்தி அதனூடாக, போசாக்கான உணவினை : பொருளாதாரத்தை அவர்களே மேம்படுத்தும் வகையில் வீட்டுத்தோட்டப்பயிர்ச் செய்கையை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறித்த செயற்றிட்டத்தின் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதைப்பைகள் பிரதேச செயலாளர்களிடம் இன்று(10) கையளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதேச செயலர் பிரிவுகளில் இச் செயற்றிட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.
மேலும் குறித்த செயற்றிட்டத்தினூடாக புடோல், வெண்டி, முளைக்கீரை, பயிற்றை, பூசணி, சிறகவரை, மிளகாய், தக்காளி, கத்தரி ஆகிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைகள் ஊக்கப்படுத்தப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இச் செயற்றிட்டத்திற்காக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 2623 பயனாளிகள், புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் 3077பயனாளிகள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 3610பயனாளிகள், துணுக்காள் பிரதேச செயலர் பிரிவில் 1023பயனாளிகள், மாந்தை கிழக்க பிரதேச செயலர் பிரிவில் 340பயனாளிகள், வெல ஓயா கிராம சேவகர் பிரிவில் 434 பயனாளிகளுமாக மாவட்டத்தில் 11,107 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.