இறந்த குழந்தையின் உடலை பெற்றோர்கள் ஏற்க மறுத்தமையால் தகனம் செய்தோம்
கடந்த டிசம்பர் 08 அன்று கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் கோவிட் நிமோனியாவால் இறந்த 20 நாள் குழந்தையின் உடலை பெற்றோர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜி.விஜேசூரியா இன்று (10) இந்த அறிக்கையை வெளியிட்டார்.
“குழந்தை ஒன்றரை நாள் தூங்கிக்கொண்டிந்ததாக தாய் கூறினார். அந்த மயக்கம்தான் நோய் அதிகரிப்பதன் காரணமாகும். மேலும், தாயின் அறிக்கையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பால் அடைப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்படட்டுள்ளது. ஆனால் பெற்றோர் குழந்தையை முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் வந்திருந்தால், அது ஒரு கட்டத்தில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆன்டிஜென் சோதனை மற்றும் பி.சி.ஆர் சோதனை ஆகிய இரண்டுமே குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியது. குழந்தையின் உடலைப் பெற பெற்றோர் யாரும் முன் வரவில்லை. பின்னர் நாங்கள் சவ அறைக்கு அனுப்பி விட்டு பெற்றோருக்கு போலீசார் மூலம் தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் உடலைப் பெற வரவில்லை. இறுதியில் மாலையில் அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்தோம். “ என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜி.விஜேசூரியா விளக்கம் அளித்துள்ளார்.