மறைந்த சித்ரா கல்லூரியில் படிக்கும் போது எடுத்த வைரல் புகைப்படங்கள்

தமிழ்நாட்டில் தற்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். அந்தவகையில் பிரபலமாக பேசப்படும் சீரியல் நடிகைகளின் ஒருவர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் VJ சித்ரா.
மேலும் சித்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘வேலுநாச்சி’ என்ற தொடரின் மூலம் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த சீரியலில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சித்ரா. தற்போது சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து தமிழ் மக்களின் மனதில் முல்லையாக நல்லதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒரு ஷோவிற்கான படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா, திடீரென தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ராவிற்கு 28 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜே சித்ரா சின்னத் திரையில் ஆற்றிய சாதனைகளை நினைவு கூறும் வகையில், அவருடைய ரசிகர்கள் பலர் அவருடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வகையில் சித்ராவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களை சித்ராவின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்வதோடு, ‘மிஸ் யு சித்ரா’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.