கொரோனாத் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் சமல்!

கொரோனாத் தொற்று சந்தேகத்தில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் சமல்!
‘பட்ஜட்’ வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ச தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய விவசாய திணைக்களப் பணிப்பாளருடன் இவர் நெருக்கமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அமைச்சர் சமல் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனாலேயே அவர் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.