சமூக வலைதளங்களில் பிரபலமாகிய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்.
அரசியலை நோக்கி பயணித்துள்ள நடிகர் ரஜனிகாந்த், தனது 70வது பிறந்தநாளை இன்று (மார்கழி12) கொண்டாடுகிறார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதால் சமூகவலைதளங்களில் அவர், அண்ணாத்த, தலைவா உள்ளிட்ட பல பெயர்களில் டிரெண்ட் ஆனார்.
இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். 1950, மார்கழி 12ம் திகதி பிறந்த நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் வருவதற்கு முன் அலுவலக சிற்றூளியராக, கண்டக்டராகப் பணிபுரிந்திருக்கின்றார். அவருக்குள் இருந்த சினிமா ஆசை, கே.பாலசந்தரின் “அபூர்வ ராகங்கள்” படம் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தது. சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் ரஜினிகாந்த் என மாறியதும் இப்படத்திலிருந்து தான். அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி இன்று மிகப்பெரிய உயரத்தில் அமர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக, சூப்பர் ஸ்டாராக, எல்லோராலும் தலைவவாக கொண்டாடப்படும் ரஜினி, அடுத்ததாக அரசியலை நோக்கி பயணித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் இவரும் களமிறங்குகிறார். ரஜினி ரசிகர்கள் நீண்டநாள் காத்திருப்பு நிறைவேற உள்ளது. அதனால் இன்று ரஜினியின் 70வது பிறந்தநாளை ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் என அரசியல் தலைவர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் அரசியல் வருகையொட்டி பல பெயர்கள், தலைப்புகளில் வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளனர். அதோடு, அவரை காண காலை முதலே அவரின் வீட்டருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சமூகவலைதளத்தில் ரஜினி சத்தம் தான் அதிகம் ஒலிக்கிறது. பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அவரின் அரசியல் வருகையை சுட்டிக்காட்டி ரஜினி கூறிய மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நாளைய தமிழகமே என கூறி தமிழக வரைபடத்தில் ரஜினியின் போட்டோவை பதித்து கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்து சொல்லியும், அரசியலில் சாதிக்கவும் வாழ்த்தி வருகின்றனர்.
சிரஞ்சீவி, ராகவா லாரன்ஸ் போன்ற திரைநட்சத்திரங்கள் சினிமாவில் ஜெயித்தது போன்று அரசியலிலும் ஜெயிக்க வேண்டி அவரை வாழ்த்தி உள்ளனர்.