யாழில் இன்று மேலும் ஆறு நபர்களுக்கு கொரணா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மருதனார்மடம் சந்தையில் 31 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 300 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 பேர் மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்ட வரின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் அடங்குவார்கள். அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்.