சர்வதேச விமான நிலையங்களை எதிர்வரும் வாரங்களில் திறக்க நடவடிக்கை.
இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் டிசம்பர் 26 திறக்கப்படுமா?
இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களை எதிர்வரும் 26ம் திகதி முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையிலுள்ள கட்டுநாயக்க, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களை திறக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வணிக விமானங்கள் மற்றும் நிரந்தர நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கான சேவைகள் வழமை போன்று வழக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான அறிவிப்பு பின்னர் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கான உறுதியாக திகதி எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.