கொழும்பில் எஞ்சிய வர்த்தக வலயங்கள் திறக்கப்படும். மனோ கணேசன்
கொழும்பில் எஞ்சிய வர்த்தக வலயங்கள் திறக்கப்படும்.
மனோ கணேசன்
கடந்த ஏழு வாரங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த, இரும்பு மற்றும் உணவு தானிய வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள, கொழும்பு பழைய சோனகர் தெரு, குவாரி வீதிகளை, படிபடியாக திறக்க, சற்றுமுன் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டது.
இதுபற்றி தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது,
கொட்டாஞ்சேனை, டேம் வீதி பொலிஸ் வலயங்களில் இப்பிரதேசங்கள் அமைந்துள்ளன.
இது தொடர்பில் வர்த்தக சங்கங்கள் என்னிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த பிரச்சினையை குழு கூட்டத்தில் நான் பிரஸ்தாபித்திருந்தேன்.
உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர், மருத்துவ அதிகாரிகள் ஆகியோரிடமும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் என்னுடன் மேல் மாகாண ஆளுநர், குழு தலைவர் பிரதீப் உதுகொட, எ/க/த சஜித் பிரேமதாச, முஜிபுர் ரஹ்மான் எம்பி, மேயர் ரோசி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.