மல்லாவி ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவ பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவ பிரிவு இன்று வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இயன்மருத்துவ பிரிவிக்காக 5.6 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கட்ரினா விட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் சிறுவர் நிதியத்தின் மூலம் வழங்கிவைக்கப்பட்டது.
பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி உமாசங்கர், சிறப்பு விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமீரா, ஏனைய விருந்தினர்களான துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அமிர்தலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் சத்தியரூபன், சிறுவர் நிதிய முகாமையாளர் சுதர்ஷன், மல்லாவி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தயட்சகர் வைத்தியர் நிலக்ஷன் மற்றும் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் இயன்மருத்துவர், உத்தியோகத்தர்கள், சிறுவர் நிதிய இயன்மருத்துவர், ஓஹான் நிறுவன பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் இவ்வைபவத்தில் பங்குபற்றினார்கள்.
இறுதியாக வைத்தியசாலை வளாகத்தில் மரநடுகை இடம்பெற்றதுடன் மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.