சூப்பர் ஸ்டாரின் கட்சி பெயர், சின்னம் இதுதான்.. ரஜினி கேட்ட சின்னத்துக்கு பதில் தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம்?
2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களைக் கொண்டு உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் நடிகர் ரஜினிகாந்த், கமல் போன்றோர் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் களத்தை பதற விட்டுள்ளனர்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தாரோ, அன்றிலிருந்து பல பெரிய கட்சிகள் தூக்கத்தை தொலைத்து திரிகின்றனர். இதனால், பல எதிர்க்கட்சியினர் ரஜினியின் மீது பல அவதூறான குற்றச்சாட்டுகளையும் பரப்பி வருகின்றனர்.
தற்போது தேர்தல் ஆணையம் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இந்த மாத இறுதியில் தனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பற்றி அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 234 தொகுதிகளுக்கும் பொது சின்னம் ஒன்றை கேட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கட்சிக்கு சின்னமாக பாபா படத்தில் இடம்பெற்ற ‘ஹஸ்தா’ முத்திரை சின்னத்தை ரஜினி தரப்பு கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் ‘ஆட்டோ’ சின்னத்தை ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.