ஆன்மிக அரசியல் வர வேண்டும். அதை, நடிகர் ரஜினிகாந்த் முன்னெடுத்து செல்வார்.
தமிழகத்தில் எல்லா நடிகர்களுக்கும் கூட்டம் சேரும். ஆனால், ஓட்டுகளாக அது மாறாது. அவ்வாறு கூட்டம் சேர்ந்தது மட்டுமின்றி, ஓட்டுகளாகவும் மாறியது, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே. தமிழக வரலாறு தெரியாதவர்கள் தான், எம்.ஜி.ஆர்., ஆட்சியை கொண்டு வருவோம் என்கின்றனர்.
‘நேரடியாகவே, நடிகர் ரஜினியால், ஆட்சி அமைக்க முடியாது; எம்.ஜி.ஆர்., ஆட்சியை கொண்டு வர முடியாது எனக் கூறி விடுங்களேன்.’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேச்சு.
டில்லியில், பார்லிமென்ட் வளாகம் கட்டும் பணி, டாடா நிறுவனத்திற்கு எப்படி கொடுக்கப்பட்டது? முறையான, ‘டெண்டர்’ மூலமாகத் தானா அல்லது முந்தைய காங்., அரசில் வழங்கப்பட்டது போல, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலா?
‘இதை விட, பிரதமர் மோடி அரசுக்கு, ‘சேம் சைடு கோல்’ யாராலும் அடிக்க முடியாது. அதனால் தான் இன்னமும் உங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லையோ…’ என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.
தமிழகத்தில் நீண்ட காலமாக திராவிட கட்சிகளின் ஆட்சி இருக்கிறது. இதற்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வர வேண்டும். அதை, நடிகர் ரஜினிகாந்த் முன்னெடுத்து செல்வார் என்பதால் தான், அவருக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது.’நாடகம் என்ற பெயர் கொண்ட கர்நாடகாவில் செல்லுபடியாகுமா என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு: ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தவிடுபொடியாகி விட்டதால், ஓட்டுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவர் மகன் உதயநிதியும் கபட நாடகம் போடுகின்றனர். அவர்களின் நாடகம், தமிழகத்தில் செல்லுபடியாகாது.
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக, முதல்வர் இ.பி.எஸ்., கூறுகிறார். ஆனால், 11 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர் பரீட்சைக்கு, 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதை இது காட்டுகிறது ‘காவலர் பணிக்கு மவுசு அதிகரித்துள்ளது என, எடுத்துக் கொள்ளுங்களேன்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.
நான் துவக்கத்தில், ஆர்.எஸ்.எஸ்., – சுதேசி அமைப்பில் இருந்தவன். அதன்பின், அ.தி.மு.க.,வில் இணைந்த பின், அந்த கட்சிக்கு விசுவாசமாக உள்ளேன். நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.