“மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை நோக்கி ” என்னும் நூல் வெளியீட்டு விழா.
மௌலவி எச். உமர்தீன் எழுதிய “மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை நோக்கி ” என்னும் நூல் வெளியீட்டு விழா ஸ{மில்
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவரும் கண்டி தாருல் ஊலூம் அரபுக் கலாசாலையின் பணிப்பாளருமான மௌலவி எச். உமர்தீன் எழுதிய “மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை நோக்கி ” என்னும் நூல் வெளியீட்டு விழா ஸ{மில் 18-12-2020 வெள்ளிக்கிழமை பி. ப. 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அப்துல் கப்பார் (தீனி) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நூல் பற்றிய கருத்துரையினை கண்டி தாருல் ஊலூம் அரபுக் கலாசாலையின் உப அதிபர் மௌலவி எம். எச். எம். ராபி (புர்கானி) நிகழ்த்தவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக கண்டி ஓராபி பா~h கலாசார நிலையத்தின் பணிப்பாளரும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவருமான எஸ் சலீம்தீன், வைத்திய கலாநிதி எம். எச். எம். சிராஸ் முதலிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூலின் சிறப்பு பிரதியை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரி~;மி கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் , கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலாமா சபையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான அல்ஹாஜ் ஆசிக் , உடம்தும்புற அல்ஹாஜ் நாஜீம் முதலிய பிரமுகர்கள் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
மீட்டிங் ஐ டி : 767 0677 4479
பாஸ்வேட் : r7uHqb
கண்டி சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி பாயிஸ் (பாஸி) நன்றியுரை நிகழ்த்துவார்.
இக்பால் அலி.