கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்! பொலிஸார் வேண்டுகோள்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த
மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்!
பொலிஸார் வேண்டுகோள் .
“கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்புப் பிரிவினர் தகவல்களைக் கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் இதற்கு பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.”
– இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொதுப்போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது அல்லது வீட்டுக்கு அப்பால் வெளியே செல்லும்போது தமது முகவரி, தேசிய அடையான அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடிதத் துண்டுகளைப் பொதுமக்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
பண்டிகைக் கால வைபவம் உள்ளிட்ட சில வைபவங்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடும். அனைத்து வைபவங்களிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்டோர் பல்வேறு தனிமைப்படுத்தல் முறை, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு மூலோபாயங்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டு.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களிடம் தகவல்களைக் கேட்டால், தகவல்களை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
படிவம் ஒன்றில் இந்தத் தகவல்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றுடன் கடிதத்துண்டு ஒன்றை நீங்கள் எப்போதும் வைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்” – என்றார்.