யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் கூட்டமைப்பினருடன் பேசி ஆட்சியமைப்போம்.மணிவண்ணன் அதிரடிக் கருத்து
யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் கூட்டமைப்பினருடன் பேசி ஆட்சியமைப்போம்.
மணிவண்ணன் அதிரடிக் கருத்து
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மற்றைய கட்சிகளுடன் வெளிப்படையாகக் கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்தச் சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவுசெய்யப்படவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக என்னைத் தெரிவு செய்வதற்கான நகர்வுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் சிறப்பான ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.
இது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் வெளிப்படையாகக் கலந்தாலோசித்து நல்லதோர் ஆட்சி அமைப்போம் என்பதைக் கூற முடியும்” – என்றார்.