நாள்தோறும் 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. மாத்தறையின் நிலைமைக்குக் காரணம் கண்டறிவு.
மாத்தறையின் நிலைமைக்குக் காரணம் கண்டறிவு
கொரோனாத் தொற்று அச்சுறுத்தலால் தற்போது பல பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும், கல்விச் செயற்பாடுகள் இணையவழி ஊடாகத் தொடர்கின்றன.
இப்படியிருக்க, தொடர்ச்சியாகக் கைத்தொலைபேசி அல்லது கணினிகளைப் பார்த்து கற்று வருவதால் இவ்வாறு 20 தொடக்கம் 30 மாணவர்கள்வரை தினமும் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் என்று மாத்தறை மாவட்ட வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணரான பிரியங்க இத்தவல தெரிவித்தார்.
இவர்களுக்குக் குறிப்பாக வாந்தி, கண்வலி, தலைச்சுற்று, கண்களில் தானாகவே கண்ணீர் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் இணையம் ஊடாகக் கற்று வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இவ்வாறு இணையம் மூலமாக கற்றலில் ஈடுபட்டுள்ளவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஓய்வெடுக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.